Friday, April 20, 2012

நீரில்லா ஒரு நதி

காற்றில் எங்கும் கரிசல் மணம் – நம்
கண்கள் அறியுமோ கதிரவன் கனம்…
ஆற்றுநீர் காணாத மஞ்சள் மணல் – அதில்
ஊற்றுநீர் தந்திடும் கிணற்றின் எழில்…
கருவேலங்காட்டு முட்செடிகள் – நம்
ஒருவேளை உணவாய் சில கோவைக்கனிகள்…
ஆடுபுலி ஆடும் கிழடுகள் – மழலை
ஓடி விளையாடும் சுவடுகள்…
வெயிலுக்கு வசைகூறும் பாதங்கள் – மூங்கில்
மயிலுக்கு இசைபாடும் நாதங்கள்…
மறக்க முடியுமா – நம்
வைகை வினாடிகள்…